Tuesday, November 2, 2010

உங்கள் பார்வைக்கு…

வணக்கம்.
வெகு நாட்களாக எந்தவொரு பதிவும் எழுதவில்லை. ஹ்ம்ம்… என்ன செய்வது? கல்லூரியில் வேலை பளு அதிகமாக இருக்கிறது. சரி, அதை விடுங்கள்.  இப்போது பதிவில் என்ன எழுதுவதென்றே எனக்குத் தெரியவில்லை… யோசித்துப் பார்த்தேன்… சரி, சில படங்களைத்தான் உங்கள் பார்வைக்கு பதிவு செய்யலாமே என முடிவு செய்தேன்… இதோ உங்கள் பார்வைக்கு…
நன்றி…

Friday, October 1, 2010

புதிய உலகம்; புதிய மக்கள்…

வீடு விட்டு வெளியே தங்கிப் படிப்பது இதுதான் முதல் முறை.  இப்போது ஏறக்குறைய மூன்று மாதங்களாகி விட்டது.  நேரம் உருண்டோடுவதே உணரவில்லை.  அவ்வளவு சுவாரஸ்யமாக இங்கு எனக்கு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.  இங்கு நான் ஏட்டுக்கல்வியை மட்டுமல்லாமல், அனுபவக் கல்வியையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.  வெவ்வேறு ரகம்கொண்ட ஆட்களை இங்கு தினம் தினம் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது.  சிலர் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்; சிலரோ வற்புறுத்தும் நண்பர்களாக இருக்கின்றனர்.  இங்குதான் முதல் முதலாக பெண்கள் புகைப்பிடிப்பதைக் காண்கிறேன். அதுவும் ஒருத்தரா? இருவரா?  எண்ண முடியாத எண்ணிக்கை. அப்பப்பா… அதுமட்டுமா?  இங்கு ஆண்களும் பெண்களும் வெளிப்படையாகப் பழகுகின்றனர்; முத்தமிட்டுக்கொள்கின்றனர்.  இப்போது நான் குறிப்பிட்டவர்களெல்லாம் என் தோழர்கள் இல்லை; என் தோழர்களெல்லாம் குணத்தில் ஒழுங்கு படைத்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.  பல இனத்தவர்கள் 59413_158577957493142_100000228152357_534752_5555383_n இப்போது என் நண்பர்கள். பிடாயு, கெஞான், சீனர், இந்தியர், சியாம் நாட்டவர், கறுப்பர், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.  நண்பர்கள் மட்டுமா? என் 60990_158578150826456_100000228152357_534768_1815776_nஆசிரியர்களும் இதுவரை நான் நினைத்துப் பார்க்காத ஆசிரியர்கள்:  கன டா நாட்டைச் சேர்ந்தவர்கள்!  இதனால்தான் என்னவோ எனக்கு நேராம் போவதே தெரியவில்லை. என்னைச் சுற்றி எல்லாம் புதிதாகத் தோன்றுகையில் எனக்கு எப்படி இந்த வாழ்க்கை பிடிக்காமல் போகும்?  இவ்வளவு சொல்லிவிட்டேனே, நான் எங்கு படிக்கிறேன் என்று சொல்ல மறந்து விட்டேன் பார்த்தீங்களா?  நான் இன்னும் மலேசியாவில்தான் இருக்கிறேன்.  நான் படிக்குமிடம்: சுபாங் ஜாயாவிலுள்ள தைலர்ஸ் கல்லூரி பல்கலைக்கழகம்…

பிறந்த நாள் வாழ்த்துகள்

நேரில் சொல்ல முடியவில்லை.  தொலைப்பேசியில் அழைக்க இயலவில்லை.  அதனால் இங்கு நான் சொல்கிறேன்.

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!

 

என்றென்றும் உன் நினைவுகளுடன்,

தீபா

Saturday, September 18, 2010

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை… தந்தை சொல்மிக்க மந்திரமில்லை…

உலகில் முதன் முறையாக நான் பார்த்தவர்கள் இவர்கள். ஆனால் அந்தச் சந்திப்பு என்னவோ எனக்கு ஞாபகம் இல்லை. ஏனெனில் நான் அப்போது சிறு குழந்தைதானே! ஆனால் என் பதினெட்டு வருட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இவர்கள். ஆம், இவர்கள்தான் என் தாய் தந்தையர். இவர்கள் இல்லையெனில் நான் இப்போது கண்டிப்பாக இவர்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் இப்புவியைக் காணும் வாய்ப்புக்கூட எனக்குக் கிட்டியிருக்காது.
முதலில் என் அப்பாவைப் பற்றி எழுதுகிறேன், படியுங்கள். மனோகரன் என்ற பெயரைக் கொண்டுள்ள என் அப்பா உண்மையிலேயே மனதில் அகரந்தான். இன்று வரையில் நாற்பத்து நான்கு ஆண்டுகள் வாழ்ந்து விட்ட என் அருமைத் தந்தை தன்னலமற்றவர். மிகவும் இலகிய உள்ளம் படைத்தவர். தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தன் வாழ்க்கையை அ20062010155 ற்பணித்தவர். அவர் இரவுச் சந்தையில் ஒரு சாதாரண வியாபாரிதான். ஆனால், அவருக்கு அந்த வியாபாரத்தில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அனுபவம். அயர்வென்றால் என்னவென்று தெரியாத உழைப்பாளி. என் அப்பாவிடம் உள்ள உயர்ந்த குணங்களில் அதுவும் ஒன்று. எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து என் அப்பா என்னை மிகுந்த பாசத்துடன் கவனித்து வருகிறார். எனக்கும் என் தங்கைகளுக்கும் ஆசைகள் ஏதாவது இருந்தால் அதைக் கேட்காமலே நிறைவேற்றி வைக்கும் அன்புள்ள அப்பா. அவருக்குக் கோபமே வராது; வந்தாலும் அதை அவருக்கு வெளிபடுத்தத் தெரியாது. கடவுள் எனக்களித்த பெரிய வரமே என் அப்பாதான் என நான் கருதுகிறேன்.
அடுத்தது என் அம்மா. பெயர் தமிழ்கொடி. வயது முப்பத்தொன்பது. இளமையான தாய். அதனாலோ என்னவோ சில சமMarainthirunthu parkkum maruppamennaயம் அவர் சிறு குழந்தையைப் போலவே நடந்துக் கொள்வார். எங்கள் வீட்டிற்குக் கலகலப்பைக் கொண்டு வருபவர் அவர்தான். என்றும் இன்முகத்து டன் இருக்கும் அவர் மிகவும் தெளிவானவர். எனக்குக் குழப்பமோ மனச்சோர்வோ வரும் தருணத்தில் அவர்தான் தன
Technorati Tags:
து பேச்சால் மீண்டும் உற்சாகமளிப்பார். சமையல் கைவந்த கலை. தாய்மை தானாய் வந்த கலை. அவர் ஒரு வித்தியாசமான தாய் என்றுதான் நான் சொல்வேன். எப்போதும் தூங்குவார், சாப்பிடுவார், படிப்பார். ஆனால் எங்களையும் கண்ணுக்குள் வைத்துக் கொள்வார். எங்களை ஒரு வீட்டு வேலையையும் செய்யச் சொல்ல மாட்டார். படி படியென வற்புறுத்த மாட்டார். ஆனால் உடல் நலத்தைப் பெரிதாக்க் கருதுபவர். நாங்கள் சரியாகத் தூங்குகிறோமா, சாப்பிடுகிறோமா என கண்காணிப்பார். ஆவரால்தான் நாங்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறோ ம். என் அம்மா என்றுமே சிறந்த தாய்தான்.
“என் வாழ்வில்” என்ற தொகுப்பில் என் அம்மாவிAmma Appaற்கும் அப்பாவிற்கும் முதலிடம் அளித்துள்ளேன். ஏனெனில், அவர்கள் இல்லையெனில் நானே இல்லையே! ஆகவே, “என் வாழ்வில்” என்ற இந்த வலைப்பூவை நான் இவர்கள் இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன். இனி வரும் பதிவுகளில் என் வாழ்க்கைச் சம்பவங்கள், என்னைப் பாதித்தவை போன்றவை இடம்பெரும். என் பதிவுகளில் ஏதேனும் குற்றங்குறை இருந்தால் மன்னித்துக் கொள்வதோடு நிறுத்தாமல், எனக்குச் சுட்டியும் காண்பியுங்கள். என் பிழைகளை நானும் திருத்திக் கொள்ளலாமல்லவா?