வீடு விட்டு வெளியே தங்கிப் படிப்பது இதுதான் முதல் முறை. இப்போது ஏறக்குறைய மூன்று மாதங்களாகி விட்டது. நேரம் உருண்டோடுவதே உணரவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமாக இங்கு எனக்கு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கு நான் ஏட்டுக்கல்வியை மட்டுமல்லாமல், அனுபவக் கல்வியையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். வெவ்வேறு ரகம்கொண்ட ஆட்களை இங்கு தினம் தினம் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. சிலர் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்; சிலரோ வற்புறுத்தும் நண்பர்களாக இருக்கின்றனர். இங்குதான் முதல் முதலாக பெண்கள் புகைப்பிடிப்பதைக் காண்கிறேன். அதுவும் ஒருத்தரா? இருவரா? எண்ண முடியாத எண்ணிக்கை. அப்பப்பா… அதுமட்டுமா? இங்கு ஆண்களும் பெண்களும் வெளிப்படையாகப் பழகுகின்றனர்; முத்தமிட்டுக்கொள்கின்றனர். இப்போது நான் குறிப்பிட்டவர்களெல்லாம் என் தோழர்கள் இல்லை; என் தோழர்களெல்லாம் குணத்தில் ஒழுங்கு படைத்தவர்களாகத்தான் இருக்கின்றனர். பல இனத்தவர்கள்
இப்போது என் நண்பர்கள். பிடாயு, கெஞான், சீனர், இந்தியர், சியாம் நாட்டவர், கறுப்பர், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நண்பர்கள் மட்டுமா? என்
ஆசிரியர்களும் இதுவரை நான் நினைத்துப் பார்க்காத ஆசிரியர்கள்: கன டா நாட்டைச் சேர்ந்தவர்கள்! இதனால்தான் என்னவோ எனக்கு நேராம் போவதே தெரியவில்லை. என்னைச் சுற்றி எல்லாம் புதிதாகத் தோன்றுகையில் எனக்கு எப்படி இந்த வாழ்க்கை பிடிக்காமல் போகும்? இவ்வளவு சொல்லிவிட்டேனே, நான் எங்கு படிக்கிறேன் என்று சொல்ல மறந்து விட்டேன் பார்த்தீங்களா? நான் இன்னும் மலேசியாவில்தான் இருக்கிறேன். நான் படிக்குமிடம்: சுபாங் ஜாயாவிலுள்ள தைலர்ஸ் கல்லூரி பல்கலைக்கழகம்…
Friday, October 1, 2010
புதிய உலகம்; புதிய மக்கள்…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment